கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.
அடினோமையாசிஸ் என்றால் என்ன:-
கர்ப்பப்பையில் மூன்று பகுதிகள் இருக்கும் வெளியே உள்ள பகுதி சீரோசா என்றும் உள்ளே உள்ள உள்பகுதி எண்டோமெட்சியம் என்றும் மத்தியில் உள்ள பகுதி மையோ மெட்ரியம் என்றும் பிரிக்கப்படுகிறது.
கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியம் சிதைந்து மையோமெட்ரியம் பகுதிக்கு சென்று கட்டியாக மாறுவது.
அடினோமையோசிஸ் வகைகள்:-
1. கர்ப்பப்பை முழுவதும் பாதிக்கப்படுவது டிபியூஸ் வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் பெரும்பான்மையான பகுதி பாதிக்கப்படு கிறது.
இன்னொரு வகைக்கு லோக்கலைஸ்டு வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் எல்லா பகுதியும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறிப்பாக கர்ப்பப்பையின் பின்பகுதியை பாதிக்கிறது.
அடினோமையோசிஸ் ஒரு பெண்ணிற்கு இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது.
இந்நோயின் அறிகுறி:- அதிக இரத்தப் போக்கு ஏற்படுதல், அடிவயிற்றின் வலி குறிப்பாக மாதவிடாயின் போது அடி வயிற்றில் வலி ஏற்படுதல், குழந்தை பேறுயின்மை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல், அடி வயிற்றில் கட்டி தென்படுதல்