No results found

  வீடுகளுக்கு கண்காணிப்பு கேமரா அவசியம்


  நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் அமைந்துள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி ஆகியவற்றில் பாதுகாப்பு அடிப்படையில் ‘குளோஸ் சர்க்கியூட் டெலிவிஷன்’ (CCTV) என்ற Video Surveillance கேமரா அமைக்கப்படுவது அவசியமாகி வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் இவ்வகை கேமராக்களை பொருத்தி தருகின்றன. பாதுகாப்பு உள்ளிட்ட பன்முகப் பயன்பாடு கொண்ட அவற்றை இணைய வழி மூலமாகவும், கைகளில் வைத்துள்ள மொபைல் போன் மூலமாகவும் செயல்படுத்தலாம். இருந்த இடத்தில் உள்ளவாறே வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட் குடியிருப்புகளை எளிதாக கண்காணிப்பு செய்ய இயலும். எல்லா நேரங்களிலும் காட்சிகளை பதிவு செய்யும் வீடியோவில் உள்ள காட்சிகளை தேவைப்படும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

  எச்சரிக்கை அலாரம் இன்றைய காலகட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. பகலில் யாரும் இல்லாதபோது வீட்டுக்குள் அன்னியர்கள் துழைந்தால் எச்சரிக்கை செய்யும் அலாரம் அமைப்பு (Burglar Alarm or Intruder Alarm) உள்ளது. வீட்டில் இல்லாத நேரத்தில் அல்லது இரவில் உறங்கும்போது யாரேனும் வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தால் தானியங்கி அலாரம் ஒலிக்கும். மேலும், அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி அல்லது மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கும். அதற்கான மறுமொழி கிடைக்காத நிலையில், அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தீயணைப்பு நிலையம் ஆகியவற்றிற்கு தகவல் அனுப்பும் வகையிலும் ‘செட்டிங்’ செய்து கொள்ளலாம். இந்த உபகரணம் சென்சார் மற்றும் கண்ட்ரோல் பேனல் ஆகிய இரண்டு அடிப்படையில் இயங்குகிறது.

  வீடியோ கண்காணிப்பு வீட்டுக்குள் இருந்தவாறே வெளிவாசல் கதவுக்கு அருகில் நிற்பவர்கள் யாரென்று அறிந்து கொண்டு, அவருடன் பேச வீடியோ கன்காணிப்பு (Video Door System) உபகரணம் பயன்படுகிறது. இதை பொருத்துவதன் மூலம் கதவை திறக்காமலே வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள் என்பதை சிறிய திறையில் வீட்டுக்கு உள்ளிருந்தே காணலாம். அவர்களது வருகையைக் கண்டு தேவைப்பட்டால் மட்டும் அவர்களோடு பேசலாம். அதன் பின்னர், அவசியத்திற்கேற்ப கதவை திறக்கலாம். இல்லாவிட்டால் அவர்கள் உள்ளே வருவதை தவிர்க்கலாம். வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பாதுகாப்புக்கு ஏற்ற சாதனமாகவும் உள்ளது. கதவுக்கு அருகில் யாரெல்லாம் வந்தார்கள், காலிங் பெல்லை யாரெல்லாம் உபயோகப்படுத்தினார்கள் என்பதைக்கூட இதன் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

  தானியங்கி உபகரணங்கள் ‘ஹோம் ஆட்டோமேஷன்’ அமைப்பை வீடுகளில் அமைத்துத் தரும் தனியார் நிறுவனங்கள் பெருநகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இன்டர்நெட் இணைப்பு மூலம் ரிமோட்டில் இயங்கும் பிளக் பாயின்டுகளில், எந்த மின் சாதனத்தையும் இணைத்து, ‘ஆன்’ அல்லது ‘ஆப்’ செய்வது, செல்போனில் இடும் கட்டளைக்கேற்ப கதவுகள் தாமாகத் திறப்பது போன்றவற்றை செய்வது எளிது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒளிரும் விளக்குகள், தொட்டியில் நீர் நிரம்பியவுடன் தாமாகவே அணையும் தானியங்கி நீரேற்று சாதனம், இணையத்துடன் இணைக்கப்பட்ட குளிர் சாதனப்பெட்டி ஆகிய வசதிகளை தற்போது எளிதாக செய்து கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து செயல்பட வைக்கும் சென்ட்ரல், ஹப், அதற்கான மென்பொருள், போன் ஆகியவை மூலம் குடியிருப்புகள் பாதுகாப்பு ஒரு கைக்குள் அடங்கி விட்டதாக குறிப்பிடலாம்.

  Previous Next

  نموذج الاتصال