No results found

    இல்லற இன்பத்துக்கு கை கொடுக்கும் அல்வா வடிவிலான லேகியங்கள்


    கண்ட கண்ட கடைகளில் வாங்கி சாப்பிடும் செக்ஸ் மாத்திரைகள் மற்றும் மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்து அதிகமாகவே உள்ளது.

    ஆனால் சித்த மருத்துவத்தில் எந்தவித சிக்கலையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்துகள் தாராளமாய் கிடைக்கின்றன. இது தொடர்பாக சித்தா டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    இன்றைய இளைஞர்கள் பலர் கடுமையான மன அழுத்தத்தில் தவிக்கிறார்கள். இளம் வயதிலேயே சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் அவர்களை ஒட்டிக் கொள்கிறது. இதன் காரணமாகவே திருமணமானதும் அவர்களால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது.

    இதற்கு சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன. அமுக்கரா லேகியம், சதாவாரி இலகம், முருங்கை பூ லேகியம் உள்ளிட்ட பல மருந்துகள் உள்ளன. அல்வா வடிவில் இருக்கும் இந்த லேகியங்களை தொடர்ந்து சாப்பிட்டால் போதும் இல்லற இன்பம் நிச்சயம் கிடைக்கும்.

    அதே நேரத்தில் பவுடர் வடிவிலான ஜாதிக்காய் சூரணமும் கை கொடுக்கிறது. குறிப்பிட்ட சில உணவு வகைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதும் பலன் அளிக்கும். வாழைப்பூவை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். செக்ஸ் உணர்வை தூண்டக் கூடிய ஹார்மோன் இதனால் எளிதில் சுரக்கும், முருங்கை பூவை பாலில் சுண்ட காய்ச்சி பருகுவதும் நல்ல பலன் அளிக்கும். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஆபத்தில் முடிந்து விடும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال