No results found

    மனைவி அல்லாத வேறு பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட 3.6 சதவீத ஆண்கள்: ஆய்வில் தகவல்


    ஆணுறை பயன்பாடு உள்ளிட்ட சில காரணிகளை மையமாக வைத்து 2019-2021-ம் ஆண்டில் தேசிய குடும்ப நல அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

    குறைந்த ஆணுறை பயன்பாடு, எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதால் அதிக ஆபத்துள்ள உடலுறவு மற்றும் அத்தகைய உடலுறவின்போது ஆணுறை பயன்பாடு ஆகியவற்றின் பரவலை அளவிடும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வில் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

    நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு 1.1 லட்சம் பெண்கள் மற்றும் 1 லட்சம் ஆண்கள் பதில் அளித்தனர்.

    கடந்த 12 மாதங்களில் 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் எத்தனை சதவீதம் பெண்கள் உடலுறவு கொண்டனர் என்பதும் இந்த ஆய்வில் இடம்பெற்றிருந்தது.

    நகர்ப்புற பெண்களை விட கிராமப்புற பெண்கள் மற்றும் திருமணமாகாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள், விதவைகள் அல்லது பிரிக்கப்பட்டவர்கள் என பல தரப்பட்டவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் கடந்த 12 மாதங்களில் தாங்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு கொண்டதாக கூறி உள்ளனர்.

    அதேநேரம் ஆண்கள் அளித்த பதிலின்படி 3.6 சதவீதம் ஆண்கள் தங்களது வாழ்க்கை அல்லது வாழ்க்கை துணையாக வாழ்ந்த பெண்கள் அல்லாமல் வேறு ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர். இது பெண்கள் சதவீதத்தை பொறுத்தவரை 0.5 சதவீதமாக உள்ளது.

    இதுதவிர பல்வேறு தகவல்களும் ஆய்வில் வெளிவந்துள்ளது. அதன்படி ராஜஸ்தான், அரியானா, ஜம்முகாஷ்மீர், மத்திய பிரதேசம், அசாம் மற்றும் கேரளாவில் கிராமப்புற பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஆண்களை விட சராசரியாக அதிகமான பாலியல் தொடர்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் பாதுகாப்பற்ற உடலுறவில் ஆண்களே அதிக அளவில் ஈடுபடுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதேசமயம், ஆபத்துள்ள உடலுறவின்போது பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆணுறைகளை பயன்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டுகிறது.

    Previous Next

    نموذج الاتصال