No results found

    திருமண வாழ்வில் ஆண், பெண்ணுக்கு இடையேயான வயது வரம்பு முக்கியம் - அறிவியல் ரீதியான உண்மைகள்!!!


    நம் முன்னோர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடவில்லை. அதன் பின்னணியில், அறிவியல், வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் பிணைந்துள்ளன. காலப்போக்கில் இன்றைய சமூதாயம் அதை, முட்டாள்தனம் என்றும் மூடநம்பிக்கை என்றும் கூறிவருகிறது.

    காதலை மிஞ்சும் நிச்சயித்த திருமணங்கள், ஓர் நெகிழ்ச்சியான தருணம்!!!

    மேற்கத்தியத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வரும் நாம் எதை பற்றியும் யோசிப்பதே இல்லை. முக்கியமாக காதலில், ஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் உடலுறவில் இருந்து வாழ்வியல் மனநிலை வரை பல விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    பிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா, தவறா?

    பிரபலங்கள் உட்பட வயது மூத்த பெண்களை திருமணம் செய்த பலரது வாழ்க்கை முறிவில் தான் முற்றுபுள்ளிப் பெற்றிருக்கின்றன. இனி, இவ்வாறு ஆண்கள் தங்களை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் ஏற்படும் அறிவியல் ரீதியான உண்மைகள் மற்றும் பாதிப்புகள் பற்றிக் காண்போம்...

    ஆண்கள் எந்த விஷயத்தில் எல்லாம் 'பக்காவா' இருந்தா பெண்களுக்கு பிடிக்கும்னு தெரியுமா...?

    மனநிலை

    சமநிலை வயதுடைய ஆண்களை விட பெண்கள் மனநிலையில் முதிர்சியானவர்கள். அதனால், தன்னை விட வயதுக் குறைந்த பெண்ணை திருமணம் செய்வது தான் சரியான முறை. இல்லையேல் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும், இது பிரிவினை உண்டாக்கும் கருவியாக மாறும்.

    உடல்நிலை

    பெண்களுக்கு பொதுவாகவே 45 - 50 வயதினுள் மாதவிடாய் சுழற்சி நின்று விடும். பெரும்பாலும் 40 வயதிலிருந்தே பெண்கள் உடலுறவில் நாட்டம் காட்டமாட்டார்கள். ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் நாட்டம் இருக்கும். இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

    வயது வரம்பு

    குறைந்தது 5-7 வருடங்கள் வரை ஆண், பெண்ணிற்கு வயது இடைவேளை இருப்பது நல்லது.

    உணர்வுகள்

    இந்த வயது இடைவேளை இல்லாத போது, அவரவர் உணர்வுகளை சரியாக புரிந்துக்கொள்ள இயலாது போகும். ஒருவருக்கு மற்றவரது உணர்வுகள் கேலியாகவும், விளையாட்டாகவும், அதிகமாக தேவையின்றி வெளிப்படுத்துவதாகவும் தோன்றும். இவை எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் உறவினுள் பிரிவை ஏற்படுத்தும்.

    கருத்தரிப்பு

    ஓர் ஆணுக்கு விந்தின் வலிமை அவனது 35 வயது வரை நல்ல வீரியத்துடன் இருக்கும். ஆனால், பெண்களுக்கு 30 எட்டும் போதே கரு முட்டையின் வலிமை குறைய தொடங்கிவிடும். இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் அபாயம் இருக்கிறது.

    உடலுறவு

    வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் உடலுறவுக் கொள்வதில் பிரச்சனைகள் எழும். பெண்ணிற்கு விரைவாகவே நாட்டம் குறைந்துவிடும். நீங்கள் உடலுறவிற்கு அணுகும் போது மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

    உறவுப் பிரச்னை

    நீங்கள் எது செய்தாலும் கணவனைப் போல பாவிக்காது, குழந்தையைப் போல பார்ப்பார்கள். ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், போக போக மனக் கசப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    Previous Next

    نموذج الاتصال