No results found

    தாம்பத்திய உறவு மேம்பட உதவும் சோற்றுக்கற்றாழை


    முள்வகை செடிதானே, கற்றாழை என்று நாம் வெறுமனே கடந்து போய் விடமுடியாது. கற்றாழையில் சோற்று கற்றாழையில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் ஏராளம். ஆங்கிலத்தில் ஆலோவேரா என்று அழைக்கப்படும் சோற்றுக் கற்றாழை செடியிலிருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் இன்று உலக அளவில் பல நூறு கோடி ரூபாய்களில் வர்த்தகமாகிறது.

    அழகு சாதன பொருட்கள்

    சோற்றுக் கற்றாழையின் வேர் மற்றும் அதன் சதைப் பிடிப்பான இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகின்றன. குறிப்பாக கற்றாழை இலைகளின் உள்ளே இருக்கும் ஜெல் என்படும் கூழில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்கள் உலக அளவில் சந்தை மதிப்பு மிக்கதாக உள்ளன. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் கற்றாழை ஜெல் மேம்படுத்துகிறது. சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றிலும் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது.

    இது உடல் சூட்டைத் தணித்தல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், உடல் எடை அதிகரிப்பை தடுப்பது, பசியின்மை, தீ காயங்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற கற்றாழை பயன்படுகிறது.

    தாம்பத்திய உறவு

    தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக்கற்றாழை பெரிதும் உதவுகிறது. கற்றாழையின் வேர்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து இட்லி குக்கர் அல்லது பானையில், பால் விட்டு அதன் ஆவியில் வேர்களை வேக வைத்து நன்றாக காய வைத்து, பின்னர் அதனை பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். தாம்பத்தியம் இனிமையாகும். இதனை இயற்கை வயகரா என்றும் கூறலாம்.

    கற்றாழையை பயன்படுத்தும் போது 7 முதல் 10 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். அலோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கழுவாமல் சாப்பிடும் போது வயிற்றுப் போக்கு ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

    மருத்துவ குணம் நிறைந்த சோற்றுக்கற்றாழையை வீட்டில் வளர்ப்போம்.

    Previous Next

    نموذج الاتصال