No results found

  கலரை சொல்லுங்கள்... உங்கள் காதலை தெரிஞ்சுக்கலாம்...


  மனிதர்களின் உணர்வுகளோடு மிகுந்த நெருக்கம்கொண்டவை. அதனால்தான் மனிதர்கள் மகிழ்ச்சியோடு வாழ விரும்பும் அவர்களது வீடுகளில், எந்தெந்த அறைகளில் எந்தெந்த நிற பெயிண்ட்களை பூசவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்கிறோம். வாங்கும் வாகனங்களில்கூட வண்ணம் எப்படி இருக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கிறோம். இப்போது 'கலர் சைக்காலஜி', என்பது பிரபலமாக இருந்துகொண்டிருக்கிறது. அதனை இளம்பெண்கள் அதிகம் நம்பு கிறார்கள். தனக்கான நண்பனையோ, காதலனையோ தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்கு தெரியாமலே அவர்களுக்கு பிடித்த கலரை அடையாளங்காணுகிறார்கள். அந்த கலரைவைத்து, அவர் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி காய்நகர்த்துகிறார்கள்.

  உங்கள் காதலருக்கு எந்த நிறம் பிடிக்கும் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அந்த நிறத்திற்கு ஏற்ப அவரது குணாதிசயமும், காதல் உணர்வுகளும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். (காதலிகளுக்கு பிடித்த நிறத்தைவைத்து அவர்களது காதல் உணர்வுகளை காதலர்களும் தெரிந்துகொள்ளலாம்தான்!)

  சிவப்பு: காதல் உணர்வு அதிகம்கொண்டவர்கள் பட்டியலில் இந்த நிறத்தை விரும்புபவர்களை சேர்க்கலாம். அவ்வப்போது காதல் உணர்வில் நீந்தத்தொடங்கிவிடுவார்கள். கற்பனையில் நினைப்பதை எல்லாம் காதலில் நிறைவேற்ற துடிப்பார்கள். இவர்கள் ஆசைப்பட்ட பெண்ணை (அல்லது ஆணை) அடையாமல் விடமாட்டார்கள். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் காதலில் மிதவாதிகளாக இருக்க முயற்சிக்கவேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு நல்லது.

  மஞ்சள்: காதலில் இவர்கள் ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். காதல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை என்று தத்துவமும் பேசுவார்கள். சில நேரங்களில் இவர்களது காதல் ஆசைகள் முரண்பாடுகொண்டதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. 'இப்படியுமா ஆசைப்படுவீர்கள் சே..' என்று சொல்லும்படி ஆகிவிடும். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப்பார்கள். அதனால் இந்த நிற மனிதர் களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். ஆனால் இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்து விட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள். காதலில் இவர்கள் காட்டாற்று வெள்ளம். கல்யாணமாகிவிட்டால் சலசலக்கும் அழகான நீரோடை.

  பிங்க்: இவர்கள் கட்டுங்கடங்காத காதல் போராளிகள். எளிதாக திருப்திகொள்ளமாட்டார்கள். புதிதுபுதிதாக இவர்களது விழிகள் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக அடுத்தடுத்து காதல் பார்வை பார்த்து ரசிப்பார்கள். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக்கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக நம்பிவிடக்கூடாது. ஏன்என்றால் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை இவர்களிடம் குறைவாக இருக்கும். பிங்க் ரசிக்கவைக்கும் அழகு நிறைந்தது. ஆனால் வாழ்க்கையை ருசிக்கும்போது நெருடல் ஏற்படலாம். அதனால் கவனம்தேவை.

  பர்பிள்: இவர்கள் தனித்துவமிக்கவர்களாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடுவார்கள். அந்த போராட்டத்திலே சிலர் தங்கள் இளமைக் காலத்தை இழந்துவிடுவார்கள். இவர்களிடம் சுயநல எண்ணம் அதிகம் இருக்கும். காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடுவார்கள். அதனால் இவர்கள் எளிதாக காதல் வலையில் விழமாட்டார்கள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனியாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் 'டன்' கணக்கில் கொட்டு வார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், 'அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது' என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். பர்பிளிடம் நெருங்கும் முன்னால் நேசம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று உரசிப்பார்த்துக்கொள்ளவேண்டும்.

  கறுப்பு: இவர்கள் காதலில் இருந்து சற்று விலகி இருக்க முயற்சிப்பார்கள். வெளிப்பார்வைக்கு இறுக்கமான மனிதர்களாக காட்சியளிப்பார்கள். யாரிடமும் மனம்விட்டுப்பேச மாட்டார்கள். அதனால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது. கறுப்புக்கு காதல் கரும்பல்ல, இரும்பு.

  பச்சை: காதலில் கசிந்துருகுவது பச்சை. இவர்கள் காதல்வசப்பட்டுவிட்டால், 'சோறு தண்ணி எல்லாம் அதுக்கு அப்புறந்தாய்யா' என்று காதலே கதி என்று கிடப்பார்கள். பச்சையை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வு அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். காதலில் பச்சையை மொத்தமாய் நம்பலாம்.

  நீலம்: இவர்கள் காதல் தத்துவஞானிகள். நீல நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிகமிருக்கும். ஆனால் தனக்கும் காதலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார்கள். பெண்கள் என்றால் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். 'தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும். நீலம் காதலைவிட கல்யாணத்திற்கு மிகவும் ஏற்றது.

  வெள்ளை: இவர்கள் மென்மையானவர்கள். காதலை வெளிப்படுத்தக்கூட பயப்படுவார்கள். அதனால் காதலை மறைத்தபடியே காலத்தை கடத்திவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒருதலைக்காதலால் அவஸ்தைப்படுவார்கள். உள்ளே காதலை மூடிவைத்துக்கொண்டு வெளியே, 'காதலாவது கத்தரிக்காயாவது..' என்று காதலுக்கு எதிராக பேசிக்கொண்டிருப்பார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெள்ளை பெரும்பாலும் காதலுக்கு தொல்லை.

  ஆரஞ்ச்: இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இவர்களிடம் வசீகரம் இருக்கும். மற்றவர்கள் இவர்களை காதலுடன் சுற்றிச்சுற்றி வந்தாலும், இவர் களுக்கு காதல் வராது. ஆரஞ்ச் மனிதர்கள் ஆன்மிக ரசிகர்கள். காதலை ரசிக்கத் தெரியாதவர்கள்!

  Previous Next

  نموذج الاتصال