No results found

    மூலிகை டீ பருகுகிறீர்களா?...கவனிக்க வேண்டிய விஷயங்கள்...


    காபி, டீக்கு மாற்றாக மூலிகைகள் கலந்த டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். முலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. டீ தயாரிப்பு முறையில் செய்யும் தவறுகள் உடல்நல பாதிப்புகள் ஏற்படவும் காரணமாகிவிடும்.

    * மூலிகை டீயின் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மூலிகை டீ பருகும்பட்சத்தில் சர்க்கரை சேர்ப்பது பொருத்தமாக இருக்காது. சர்க்கரைக்கு மாற்றாக தேன் சேர்த்து பருகலாம். உடல் பருமனை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் தேன் கலந்து பருகுவது நல்ல பலனை கொடுக்கும். சூடாக தயாரிக்கப்பட்ட முலிகை டீயில் ஒருபோதும் தேன் கலந்துவிடக்கூடாது. மிதமான சூடான இருக்கும்போதுதான் தேன் கலக்க வேண்டும்.

    * மூலிகை டீயை அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ பருகக்கூடாது. மிதமான சூட்டில் பருகுவதே சிறந்தது. அதிலும் பித்தம் சார்ந்த பிரச்சினை உடையவர்கள் ஓரளவு மிதமான சூட்டில் அருந்துவதே நல்லது.

    * பெரும்பாலானவர்கள் காபியோ, டீயோ அளவுக்கு அதிகமாக தயார் செய்துவிட்டால் சில மணி நேரம் கழித்து மீண்டும் அதனை சூடுபடுத்தி குடிப்பார்கள். அதுபோல் மூலிகை டீயை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி பருகக்கூடாது. அப்படி பருகினால் மூலிகையில் உள்ள சத்துக்கள் நீக்கிவிடும்.

    * பித்தம் சம்பந்தமான பிரச்சினை உடையவர்கள் கோடை காலங்களில் மூலிகை டீ பருகுவதை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்களிலும் அடிக்கடி பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال