No results found

    ரொமான்டிக்கான மனைவியாக இருக்க வேண்டுமா..?


    கணவர்கள் தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டாக தத்தம் மனைவியரிடம் எப்பொழுதும் ரொமான்ஸ் செய்வது வழக்கம். அதே நேரம், தம்பதிகளுக்குள்ளான உறவுமுறை ஆரோக்கியமாகவும், காதல் மேலும் ஊற்றெடுக்கும் வகையில் இருக்கவும், மனைவியரும் தங்களிடம் ரொமான்ஸை பராமரிக்க வேண்டும்.

    ரொமான்ஸ்க்கு அடிப்படையான விஷயமாக இருப்பது குறும்புகளாகும்; ரொமான்ஸ் செய்வதற்கு மிகவும் முக்கியமான விஷயங்களாக இருப்பது ஏற்கனவே உறுதியாக இருக்கும் பிணைப்பை நிலைநிறுத்துவதும் மற்றும் அதற்கு மரியாதை அளிப்பதும், அதைப் பற்றி எண்ணுவதும், ஆர்வத்துடனும் இருப்பதும் ஆகியவைகளே.

    அவருடைய விருப்பங்களை கவனித்தல்

    கணவர்களை வெளியே அழைத்துச் செல்லும் வகையில் திட்டமிடச் சொல்லும் வேளைகளில், அவர்களுக்குப் பிடித்தமான சில செயல்களை செய்து, தங்களுடைய மனைவியருடன் மகிழ்ச்சியுடன் கழிக்க நினைப்பார்கள். ஒரு ஹாக்கி விளையாட்டாகவோ, மல்யுத்தமாகவோ அல்லது குழுவாக வெளியே சென்று வரும் டேட்டிங் என எதுவாக இருந்தாலும், தங்களுடைய மனைவியரும் கைகோர்த்துக் கொண்டு வரத் தயார் என்றால் கணவர்களுக்கு குஷி தான்.

    பாராட்டுங்கள்

    திருமணமான தம்பதிகள், சில நேரங்களில் மற்றவர்களிடம் என்ன நிறைகள் உள்ளன என்று பாராமல், குறைகளை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுடைய கணவர்களிடம், வீட்டை சுத்தம் செய்தல், சமைத்தல் மற்றும் அது போன்ற வீட்டு வேலைகளை செய்வதை சொல்லி குறைபட்டுக் கொள்வார்கள். ஆனால், அந்த வேளைகளில் கணவருடைய புதிய ஹேர்கட் ஸ்டைலைப் பற்றி பாராட்டுவதும், அவர் செய்த செயலைப் பற்றி சிறப்பாக பேசுவதும் நல்ல ரொமான்ஸை கொடுக்கும்.

    பொழுதுபோக்கு

    உங்களுடைய கணவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் எது உங்களுக்கும் பிடிக்கும் என்பதை பொறுப்புள்ள மனைவியானவள் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும். உலகளவில் பிரபலமான உணவுகள், பனிச்சறுக்கு, மாதிரி விமானங்கள் உருவாக்குதல் அல்லது ஸ்கை டைவிங் என எந்தவொரு விருப்பமான விஷயத்தை செய்யும் போதும், தம்பதியர் கைகோர்த்துக் கொண்டு செய்தால், உங்களிடம் ரொமான்ஸ் கூடிக் கொண்டே போகும்.

    கேளுங்கள்!

    பேசுவதை கேட்பது ரொமான்டிக்காக இருப்பதற்கு மிகவும் முக்கியமான தகுதியாகும். ஏனெனில், அதன் மூலம் மனைவிகள் தங்களுடைய கணவருடைய விருப்பங்கள் மற்றும் தேவைகளை மிகவும் நன்றாக, விரிவாக புரிந்து கொள்ள முடியும். கணவர்கள் இந்த அதிகபட்ச கவனத்தை குறிப்பிட்டு சொல்லும் வேளைகளில், அன்பு அதிகரிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

    அவருக்காக குரல் கொடுத்தல்

    ஆண்கள் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவர்கள் தான், ஆனால் அவர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படும். ஒரு பெண்ணுடைய கணவரைப் பற்றி, குடும்ப உறுப்பினரோ, நண்பரோ அல்லது புதியவர் ஒருவரோ தவறாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளைகளில், மனைவியானவள் எந்தவித மாற்று எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் கணவருக்காக பரிந்து பேச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கணவரும் பயமில்லாமல் தன்னுடைய பெருமையை நிலைநாட்ட முயற்சிப்பார்.

    Previous Next

    نموذج الاتصال