No results found

  கோட்டாறு புனித சவேரியார் பேராலய வரலாறு


  பழைய வேணாட்டின் தலைநகராக விளங்கிய கோட்டாறு பட்டணம் தற்போது கோட்டாறு என்ற பெயரோடு கோட்டாறு மறை மாவட்டத்தின் தலைமை பங்காக விளங்கி வருகிறது. “கோட்டம்” என்றால் வளைவு என்று பொருள், ஆகவே, இப்பட்டணமானது வற்றாத பழையாற்றின் வளைவு பகுதியில் அமைந்துள்ளதால் கோட்டாறு எனப்பெயர் பெற்றது.

  தூய சவேரியார் திருவிதாங் கூர் அரசரிடமிருந்து தற்போதைய பேராலயத்தை சுற்றியுள்ள சிறிய நிலத்தை பெற்று தூய ஆரோபண அன்னை சிற்றாலயத்தை நிறுவினார்.

  * தூய சவேரியார் பயன்படுத்திய திருபீடத்தின் ஒரு பகுதியை 1602-ல் அருட்பணி.அந்தரியாஸ் புச்சாரியோ சே.ச மூவொரு ஆலயமாக உருவாக்கினார்.

  * 1603-ல் அருட்பணி. அந்திரியாஸ் புச்சாரியோ களிமண்ணும் ஓலையும் பலகையும் கொண்டு தூய சவேரியார் புனிதர் பட்டம் பெறுவதற்கு முன்பே அவர் பெயரில் ஒரு சிற்றாலயத்தை நிறுவினார்.

  * 1.3.1603-ல் (தவக்காலத்தின் முதல் ஞாயிறு) அன்று முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

  * 1603-ம் ஆண்டு உரோமை யிலிருந்து அருட்பணி. பேதுரு அந்தோணியோ ஸ்பினல்லி அனுப் பிய புனித சவேரியார் திருவுருவ படம் ஆலயத்தின் நடுப்பீடத்தில் நிறுவப்பட்டது.

  * 1640-ல் களிமண்ணாலும், பலகையினாலும் உருவாக்கப்பட்ட ஆலயம் அகற்றப்பட்டு கற்களால் உருவாக்கப்பட்டது.

  * 1640-ல் மரியன்னை சிற்றாலய பீடம் புதுப்பிக்கப்பட்டது.

  * 1643-ல் புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் ஆகியோரின் திருப்பண்டங்கள் கோட்டாறு கொண்டுவரப்பட்டு இன்றும் இவ்வாலயத்தில் பாதுகாக்கப்படு கின்றன.* 1713-ல் கற்கோயில் ஆலயம் விரிவாக்கப்பட்டது.

  * 1865-ல் ஆலயம் பெரிதாக்கப்பட்டு வடக்கும், தெற்குமாக புறப்பகுதிகள் நீட்டப்பட்டன.

  * 1865-ல் கோயிலின் கூரை ஓடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பீடத்திற்கு மேலே விதானுமும், மரியன்னை சிற்றாலயத்திற்கு உயரே விதானமும் கட்டப்பட்டது.

  * 1876-ல் கொல்லத்தை சேர்ந்த கட்டிட கலைஞர் ஜோக்கிம் பெர்னாண்டஸ் என்பவவால் அழகிய மர பீடம் ஆலயத்தில் அமைக்கப்பட்டது.

  * 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திருவிதாங்கூர் மாநில கட்டிடக்கலை நிபுணர் ஜாண் லூயிஸ் பெர்ணாண்டஸ் என்பவரால் திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய அரலவாய்மொழி பெருங்கற்களை கொண்டு மண்டபம் எழுப்பப்பட்டது.

  * 1942-ல் புனித சவேரியாரின் இந்திய வருகையின் 400-ம் ஆண்டை முன்னிட்டு பேராலய வளாகத்தின் வடகிழக்கு மூலையில் புனித சவேரியாரின் திருவுருவத்தை கொண்ட ஒரு கோபுரமும், லூர்து அன்னை கெபி ஒன்றும் கட்டப்பட்டது.

  * 1967-ம் ஆண்டு முதல் புனித சவேரியார் பெருவிழா தினத்தன்று உள்ளூர் விடுமுறை விட அரசு ஆணை பிறப்பித்தது.

  * 1970 முதல் புனித சவேரியார் பெருவிழாவானது அனைத்து சமூக மக்களும் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

  * 1978-ல் கொடி கம்பத்தின் அடியில் காணப்படும் புனித இஞ்ஞாசியார் குருசடி புதுப்பிக்கப்பட்டது.

  * 17.8.1992-ம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஆலயத்தின் உள்பகுதி முழுவதிலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டது.

  * 1.5.1994-ல் புனித சவேரியாரின் இந்திய வருகையின் 450-ம் ஆண்டு நினைவாக அவர் திருப்பலி நிறைவேற்றிய மரியன்னை பீடத்தில் முழு நேர நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்டது.

  * 3.2.2012 கர்தினால் ஆஞ்சலோ அமர்த்தோ தூய சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையை தரிசித்தார்கள். மேலும் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு 2.12.2012 அன்று முத்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.

  * 2013 பிப்ரவரி மாதம் அன்னையின் சப்பர பவனி துவங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

  * 2013 நவம்பர் மாதம் “ஆதாயம்” என்னும் இரு மாத இதழ் துவங்கப்பட்டது.

  * 1622-ல் தூய சவேரியார் புனிதர் பட்டம் பெற்ற தினத்திற்கு முன்பே 1603 ஆண்டிலே அவர் பெயரில் ஆலயம் நிறுவப்பட்டதால் உலகில் புனித சவேரியார் பெயரில் எழுப்பப்பட்ட முதல் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு.

  * 1640-ல் கற்களை கொண்டு ஆலயம் எழுப்பப்பட்டதால் இந்நிலப்பகுதியில் எழுந்த முதல் கல்லுக்கோயில் என்ற பெருமையும் உண்டு.

  * 14.1.1752-ல் கோட்டாறு மறைமாவட்டத்தின் முதல் மறைசாட்சியான தேவசகாயம் பிள்ளையின் பூத உடல் இவ்வாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

  * 3.2.1859-ல் தற்போதைய கோயிலின் கல் மண்டபத்தை கட்டிய ஜாண் லூயிஸ் பெர்னாண்டஸ் அடக்கம் செய்யப்பட்டார்.

  * 1910-ம் ஆண்டு வரை புனித சவேரியார் பெயரில் நடந்த 69 புதுமைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கோட்டாறில் கொலுவீற்றிருக்கும் புனித சவேரியார் பெயரில் வைத்த மன்றாட்டுக்கள் மூலம் நிகழ்ந்ததால் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.

  * கோட்டாறு மறை மாவட்டம் 24.5.1929-ம் ஆண்டு மேதகுஆயர் அலோசியஸ் மரிய பென்சிகரால் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து தனி மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து குரததுவம் பெற்ற முதல் அருட்பணியாளர், உபால்டு ராஜ் பெர்னாண்டோ கோட்டாறு பங்கை சார்ந்தவர் என்ற பெருமையும் உண்டு.

  * கோட்டாறு மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த மூன்று ஆயர்கள் இவ்வாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  1. மேதகு லாரன்ஸ் பெரைரா (5.1.1938)

  2. மேதகு தாமஸ் ரோச் ஆஞ்ஞிசாமி சே.ச (7.5.1974)

  3. மேதகு லியோன் அ.தர்மராஜ் (16.1.2007)

  * ஆலய கோபுரத்தில் தற்போது மூன்று மணிகள் கொண்டு அலங்கார ஒலி எழுப்பப்படுகின்றது.

  * ஏறத்தாழ 450 ஆண்டுகளாக மக்கள் பக்தியோடு வணங்கி வரங்கள் பெற்று வரும் திருத்தலம் இது. இன்றும் எல்லா மதத்தையும் சார்ந்த ஏராளமான மக்கள் எந்தவித பாகுபாடும் இன்றி நாள்தோறும் வந்து தங்களது வேண்டுதல் களை கூறி வரங்களை பெற்று செல்கிறார்கள்.

  * இந்த ஆண்டு (2017) கேட்டவரம் தரும் கோட்டாறு பேராலயத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

  1. வழக்கமாக கொண்டாடுகிற ஆண்டு பாதுகாவலர் பெருவிழா

  2. பேராலய விரிவாக்கம் - மறுசீரமைப்பு (9.12.2016- 18.11.2017)

  3. புனித சவேரியாரின் இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா

  Previous Next

  نموذج الاتصال