No results found

    கணவனிடம் மனைவி எப்போதும் சொல்லக்கூடாதவைகள்!!!


    பொதுவாக திருமணத்திற்கு பின் கணவன்மார்களை விட மனைவிகள் தான் அதிகம் பேசுவார்கள். இப்படி இவர்கள் அதிகம் பேசுவதாலேயே வீட்டில் பெரிய பெரிய சண்டைகள், பூகம்பங்கள் வெடிக்க ஆரம்பிக்கிறது. இதை பலர் மறுத்தாலும், அது தான் உண்மை. மேலும் திருமணத்திற்கு பின் பெண்கள் தான் அதிகம் வாக்குவாதம் செய்வதுடன், குறைகளும் சொல்வார்கள்.

    அதுமட்டுமல்லாமல் சில பெண்கள் பேசும் போது, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நகைச்சுவையாக பேசுகிறேன் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சரளமாக பேசிவிடுவார்கள். இப்படி எதையும் நினைக்காமல் பேசுவதால் தான் சண்டைகள் வீட்டில் வருகின்றன. ஆனால் பெண்கள் கட்டுப்பாட்டுடன் கணவனிடம் எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக்கூடாது என்பதை தெரிந்து பேசி வந்தால், வாழ்க்கையானது இனிமையாக செல்லும்.

    இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கணவனிடம் மனைவி சொல்லக்கூடாதவைகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் கணவனிடம் சொல்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

    எதையும் அடிக்கடி சொல்ல வேண்டாம்

    பெரும்பாலான மனைவிகள் செய்யும் ஒரு தவறு தான் இது. எதை கணவனிடம் சொன்னாலும் அதை திரும்ப திரும்ப சொல்லி, நீங்கள் சொன்னதையே மறக்க வைப்பது. உதாரணமாக, மாலையில் வேலை முடிந்து வரும் போது மறக்காமல் ஒரு பொருளை வாங்கி வரச் சொன்னால், அதை அவர் வீட்டிற்கு வருவதற்குள் குறைந்தது 50 முறையாவது சொல்வது.

    வீட்டு வேலையை செய்ய சொல்வது

    பொதுவாக ஆண்களுக்கு வீட்டு வேலையை செய்ய சொன்னால் பிடிக்காது. ஆனால் அவர்களுக்கே தோன்றினால், அவர்கள் எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆகவே எப்போதும் அவர்களிடம் வீட்டு வேலையை செய்யுமாறு சொல்லக்கூடாது. இதனால் வீட்டில் சண்டைகள் தான் அதிகமாகும்.

    பெரிய தவறு செய்துவிட்டேன்

    கோபம் அல்லது சண்டை வந்தால், அப்போது உடனே உங்களை திருமணம் செய்து நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என்று எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது. இதனால் அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பு தான் அதிகரிக்கும்.

    படுக்கையில் நீங்கள் மோசம்

    எப்போதுமே ஆண்களுக்கு படுக்கையில் தான் தான் சிறந்தவராக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆகவே படுக்கையில் இருக்கும் போது உங்கள் கணவனிடம் நீங்கள் மிகவும் மோசம் என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    இன்னும் அதிகம் சம்பாதிங்க...

    சம்பளம் போதாது, இன்னும் அதிகம் சம்பாதிங்க என்று மனைவி தன் கணவனிடம் சொல்லக்கூடாது. ஆண்களுக்கு எப்போதுமே நிறைய சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இருப்பினும் அவரால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தான் முடியும். எனவே எப்போதும் அவரிடம் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கக்கூடாது. மேலும் வாங்கும் சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தை சந்தோஷமாக நடத்தும் மனைவியைத் தான் ஆண்களுக்கு பிடிக்கும்.

    பழைய பிரச்சனைகள்

    சில மனைவிகள் தங்கள் கணவனிடம் பழைய பிரச்சனைகளைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டோ அல்லது ஒப்பிட்டுக் கொண்டோ இருப்பார்கள். இப்படி இருந்தால், வாழ்க்கையை தான் சீரழியும். எனவே இதை முதலில் தவிர்க்க வேண்டும்.

    மாமியாரின் பேச்சு

    "உங்க அம்மா என்னை எதிரி போல எப்ப பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார்" என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் எந்த ஒரு ஆணுக்கும் தன் மனைவி தன் அம்மாவை எதிர்த்து பேசினாலும் பிடிக்காது.

    Previous Next

    نموذج الاتصال